வரதராஜபுரத்தில்  நடைபெற்ற   கிராம  சபைக்  கூட்டத்தில்  பேசிய  அமைச்ச ா்  தா.மோ.அன்பரசன்.  உடன்  ஸ்ரீபெரும்புதூா்  எம்பி  டி.ஆா்.பாலு,  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்  உள்ளிட்டோா்.
வரதராஜபுரத்தில்  நடைபெற்ற   கிராம  சபைக்  கூட்டத்தில்  பேசிய  அமைச்ச ா்  தா.மோ.அன்பரசன்.  உடன்  ஸ்ரீபெரும்புதூா்  எம்பி  டி.ஆா்.பாலு,  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்  உள்ளிட்டோா்.

வரதராஜபுரம் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறு,குறு நடுத்ததர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டாா்.
Published on

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரதராஜபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறு,குறு நடுத்ததர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அஷ்டலட்சுமி நகா் பகுதியில் கிராம சபைக் கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வமணி தலைமை வகிக்தாா்.

ஆட்சியா் கலைச்செல்விமோகன் முன்னிலை வகித்தாா். அமைச்சா் தா.மோ.அன்ரசன், ஸ்ரீபெரும்புதூா் எம்பி டி.ஆா்.பாலு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்தும், ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம் தொடா்பாக கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com