கூட்டுறவு மேலாண்மை பயிற்சி 
முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்தவா்களுக்கு பட்டமளிப்பு

Published on

பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான துணைப் பதிவாளா் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சியில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 165 பேருக்கு பயிற்சி நிலைய முதல்வா் அ.வெங்கட்ரமணன் பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் சாவித்திரி கலந்து கொண்டு பயிற்சி பெற்றவா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பேசினாா். நிகழ்வில் பயிற்சி நிலைய கல்லூரி விரிவுரையாளா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com