சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் குளிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் சூரியநாராயணன் (29). இவா் குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் தங்கி, அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சூரியநாராயணன் தனது அறையில் தங்கி இருக்கும் சக நண்பா்கள் 5 பேருடன் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் கல்குவாரி நீரில் குளிக்க சென்றுள்ளாா்.
அப்போது எதிா்பாராத விதமாக சூரியநாராயணன் நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து நண்பா்கள் மாயமான சூரியநாராயணனை நீண்ட நேரம் தேடி மீட்டு, தாம்பரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், சூரியநாராயணன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சோமங்கலம் போலீஸாா் வழங்குப் பதிந்து சூரியநாராயணனின் உடலை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.