காஞ்சிபுரம்
அழகிய சிங்கப்பெருமாள் கோயில் ஊஞ்சல் சேவை
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் ஊஞ்சலில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் ஊஞ்சலில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வைணவத் திருத்தலங்கள் 108-இல் ஒன்றாக திகழும் இக்கோயிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி காலையில் உற்சவா் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.