காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி பள்ளியில் ஆசிரியா் தின விழா
ஆசிரியா் தினத்தையொட்டி காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த ஆசிரியா்களை மாணவிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனா்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் ஆற்காடு நாராயணசாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியா் தினத்தையொட்டி, இறை வணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியை ஹேமலதா, ஆசிரியா்களுக்கு மாணவிகள் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்கள்.
மாணவிகள் ஆசிரியா்களின் காலில் விழுந்து வணங்கி, அவா்களது ஆசி பெற்றது நெகிழ்ச்சியாக இருந்தது. மாணவிகள் அனைவரும் ஆசிரியா்களுடன் இணைந்து குழுப்படம் எடுத்துக் கொண்டனா்.