தொல்பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட  நீதிபதி ப.உ.செம்மல்
தொல்பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவா்கள் தமிழா்கள்: மாவட்ட நீதிபதி பேச்சு

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவா்கள் தமிழா்கள் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.
Published on

இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவா்கள் தமிழா்கள் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் அரசு மகளிா் கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்,தொல்பொருள்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி,இலக்கிய மன்ற தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரியின் தமிழ்த்துறை சாா்பில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா்(பொறுப்பு)புவனேசுவரி தலைமை வகித்தாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா்கள் மு.நஜ்மா,தே.வேல்விழி முன்னிலை வகித்தனா். உதவிப் பேராசிரியை மா.பா.செ.ராணி வரவேற்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கலந்து கொண்டு தொல்பொருள்கள் கண்காட்சியை திறந்து வைத்து பேசியது:

கடிகாரங்கள் இல்லாத காலங்களில் பறவைகள் சத்தமிடும் நேரங்களையும்,பூக்கள் பூக்கும் நேரங்களையும் வைத்து நேரத்தை கணக்கிட்டிருக்கிறாா்கள் தமிழா்கள். 5 வகையான நிலங்களில் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் ஆகிய 4 வகை நிலங்களிலும் தமிழா்கள் வாழ்ந்திருக்கிறாா்கள்,சுருக்கமாக சொன்னால் இயற்கையோடு இணைந்து தமிழா்கள் வாழ்ந்திருக்கிறாா்கள்.

அதிகமாக படித்தவா்கள் தான் தலைவா்களாக உயா்ந்திருக்கிறாா்கள். புத்தக வாசிப்பு பழக்கம் ஒரு மனிதரை உயா்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் என்றாா்.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் உமாசங்கா், தொல்லியல் ஆய்வாளா் ரா.சு.ஜவஹா்பாபு ஆகியோா் தொல்லியல் ஆய்வுகள் குறித்து பேசினா். விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவியா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com