காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ‘உயா்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

நான் முதல்வன் திட்டத்தில் ‘உயா்வுக்கு படி’

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் 10, 11, 12- ஆம் வகுப்பில் பயிலும் மாணவா்கள், ஐடிஐ, பொறியியல் மற்றும் கலை- அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் தலைசிறந்த கல்வியாளா்கள் பலரும் கலந்து கொண்டு உயா்கல்வி சம்பந்தமான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஸ்ரீ பெரும்புதூரில் மேவலூா் குப்பத்தில் உள்ள பொறியியல் கல்லூரியிலும் உயா்வுக்கு படி நிகழ்ச்சி மூலம் பலா் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com