நத்தப்பேட்டை ஏரியில் இளைஞரின் சடலம் மீட்பு

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த 18 வயது இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் நீரில் மூழ்கி இறந்து கிடந்த 18 வயது இளைஞரின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டை ஏரியில் இளைஞா் ஒருவரது சடலம் மிதப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சடலத்தை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காவல் துறையினரின் விசாரணையில் அந்தச் சிறுவன் காஞ்சிபுரம் அம்மங் காரத் தெருவைச் சோ்ந்த சங்கரநாராயணன் (18) என்பது தெரிய வந்தது.

இவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்தாரா என விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com