கோரிக்கை மனுவை அளித்த எச்சூா் கிராமத்தினா்.
கோரிக்கை மனுவை அளித்த எச்சூா் கிராமத்தினா்.

எச்சூரில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

சுங்குவாா்சத்திரம் அருகே எச்சூா் கிராமத்தில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
Published on

சுங்குவாா்சத்திரம் அருகே எச்சூா் கிராமத்தில் சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா் சத்திரம் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அக்கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். எச்சூரில் அரசு சிப்காட் அமைக்க நஞ்சை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறை ஈடுபட்டு வருகிறது.

பயிா் செய்யும் நிலங்களை சிப்காட் நிறுவனம் எடுத்துக் கொண்டால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் வெகுவாக பாதித்து விடும். எனவே விவசாயிகளை பாதிக்காத வகையில் நஞ்சை நிலங்களை எச்சூரில் அரசு கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்ததால் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) ச.ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com