காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றி வந்த ப.உ.செம்மல் அரியலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ப.உ.செம்மல். அண்மையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயா்நீதிமன்றம் கைது உத்தரவை ரத்து செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடா்பாக விசாரணையும் நடைபெற்றது.
இந்த நிலையில் ப.உ.செம்மல் அரியலூா் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
புதிய முதன்மை நீதிபதி...
சென்னை எழும்பூா் முதன்மை வணிக நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த தீப்தி அறிவுநிதி காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் இதற்கு முன்பு மதுரை, திருவள்ளூா் மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் பணியாற்றியவா்.

