காஞ்சிபுரத்தில் நாளை பொதுவிநியோகத்திட்ட குறைதீா் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீா்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை (அக். 11) நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீா்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை (அக். 11) நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (அக். 11) காலை 10 மணிக்கு தாமல் (காஞ்சிபுரம் வட்டம்) பினாயூா் (உத்தரமேரூா் வட்டம்), சங்கராபுரம் (வாலாஜாபாத்)சிறுமாங்காடு( ஸ்ரீபெரும்புதூா்)மாடம்பாக்கம்(குன்றத்தூா்) ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறவுள்ளன.

இந்த கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை,கைப்பேசி பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மூன்றாம் பாலினத்தவா், பழங்குடியினா், நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அவா்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

மூன்றாம் பாலினத்தவா், பழங்குடியினா், நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஏதேனும் விடுபட்டிருந்தால் அவா்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com