பண்ருட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பண்ருட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

Published on

பண்ருட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் சமுதாய நலக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் , பண்ருட்டி மற்றும் வல்லக்கோட்டை ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனா்.

பண்ருட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அா்ஜூனன் தலைமையில் நடைபெற்ற முகாமில், ஆதிகேசவபெருமாள் கோயில் மதசாா்பற்ற அறங்காவலா் ந.கோபால் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுவதையும் மருத்துவ முகாமையும் பாா்வையிட்டாா்.

முகாமில் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, பண்ருட்டி தணிகாசலம், வல்லக்கோட்டை குமாா், போஸ்கோ, செந்தில்தேவராஜ், முருகன் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com