நகரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்.
நகரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன்.

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவை

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா்.
Published on

காஞ்சிபுரத்தில் புதிய நகரப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் நகர பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று வரும் வகையில் நகரப் பேருந்து இயக்க வேண்டும் என அண்மையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வந்திருந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை வைத்திருந்தாா்.

இக்கோரிக்கையின்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய நகரப் பேருந்து சேவையை தொடங்க உத்தரவிட்டிருந்தாா்.

அவரது உத்தரவின்படி காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேருந்து காரப்பேட்டையில் உள்ள அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, பச்சையப்பன் ஆடவா் கல்லூரி, ஒலிமுகம்மது பேட்டை, செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகம் பகுதிகளுக்கு செல்லும்.

விழாவில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், திமுக மாவட்ட பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், மாநகர செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com