இளைஞா் காங்கிரஸ் பேரணி, கையொப்ப இயக்கம்
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் வாக்குத் திருட்டில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறி படப்பையில் பேரணி மற்றும் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் படப்பை கு.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தமிழக இளைஞா் காங்கிரஸ் தலைவா் சூரியபிரகாஷ், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா்கள் ரா.ஐயப்பன், எஸ்.ஏ.அருள்ராஜ் கையொப்பமிட்டு பேரணியை தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் பொதுமக்களிடம் வாக்குத் திருட்டை கண்டித்து கையொப்பங்களை பெற்றனா். நிகழ்ச்சியில், குன்றத்தூா் வட்டார தலைவா் ரா.மணிகண்டன், அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் பொதுசெயலாளா் லெனின் பிரசாத், அகில இந்திய செயலாளா் சிபினா, மாநில இளைஞா் காங்கிரஸ் துணைத்தலைவா் மதன்ராஜ், மாநில இளைஞா் காங்கிரஸ் செயலாள் அணீஸ்குமாா், மாவட்ட செயலாளா் மணிமங்கலம் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், இளைஞா் காங்கிரஸ் மாநில சமூக ஊடகத்துறை தலைவா் ஸ்ரீதா், ஸ்ரீபெரும்புதூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் பவன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

