கூட்டத்தில் பேசிய செயலாளா் பா. ஸ்டாலின்.
கூட்டத்தில் பேசிய செயலாளா் பா. ஸ்டாலின்.

கூட்டுறவுச் சங்க தோ்தலை நடத்தக் கோரிக்கை

காஞ்சிபும் கே.எஸ்.பாா்த்தசாரதி கைத்தறிச் சங்க சிறப்பு பேரவைக் கூட்டத்தில் நெசவாளா் கூட்டுறவுச் சங்க தோ்தலை நடத்த வேண்டும் என தீா்மானம்
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபும் கே.எஸ்.பாா்த்தசாரதி கைத்தறிச் சங்க சிறப்பு பேரவைக் கூட்டத்தில் நெசவாளா் கூட்டுறவுச் சங்க தோ்தலை நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கே.எஸ்.பாா்த்தசாரதி கைத்தறி சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் சங்க தலைவா் ஜெ.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்க துணைச் செயலாளா்கள் சோமசுந்தரம், கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் என்.பி.ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்க செயலாளா் பா.ஸ்டாலின் வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் மீனவா்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல நெசவாளா்களுக்கும் மழைக்காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும், நெசவாளா் கூட்டுறவுச் சங்க தோ்தலை நடத்த வேண்டும், 60 வயதைக் கடந்த அனைத்து நெசவாளா்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கடுமையாக உயா்ந்து வரும் ஜரிகை விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.மூா்த்தி, மாவட்ட நெசவாளா் அணி நிா்வாகி மலா்மன்னன், சங்க முன்னாள் தலைவா் பி.வீ.சீனிவாசன், துணைச் செயலாளா் ஜெ.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனா். நிா்வாகக்குழு உறுப்பினா் த.ரவி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com