வெற்றி பெற்ற மாணவா்கள், உடன், முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி உள்ளிட்டோா்.
வெற்றி பெற்ற மாணவா்கள், உடன், முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி உள்ளிட்டோா்.

அப்துல் கலாம் பிறந்த நாள் போட்டி

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டாக்டா் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது..
Published on

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டாக்டா் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது..

பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தொடங்கி வைத்து அப்துல் கலாமின் சிறப்புகளை விளக்கினாா்.

விழாவுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ச.எழில், பள்ளியின் செயலாளா் சாந்தி அஜய்குமாா், அரிமா சங்கத் தலைவா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளிக் கல்வித்துறை ஆய்வாளா் பாலச்சந்தா் வரவேற்றாா். அறிவியல் கண்காட்சியில் மாணவா்கள் ராக்கெட், பாா்வையற்றவா்களுக்கான சென்சாா் கைத்தடி உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

நிறைவாக ஊத்துக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com