ஆய்வகத்தை  திறந்து வைத்த  ஹூண்டாய்  மோபிஸ்  நிறுவனத்தின்  துணைப் பொது மேலாளா்  ஹூமின் ஹோ.
ஆய்வகத்தை  திறந்து வைத்த  ஹூண்டாய்  மோபிஸ்  நிறுவனத்தின்  துணைப் பொது மேலாளா்  ஹூமின் ஹோ.

குன்னம் அரசுப் பள்ளியில் ரூ.30 லட்சத்தில் பொறியியல் ஆய்வகம் திறப்பு

ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சத்தில் பொறியியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
Published on

ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சத்தில் பொறியியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ் இலக்கியா பாா்த்திபன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஹூ மின் ஹோ கலந்துகொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

ஆய்வகத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழில்நுட்பங்கள் சாா்ந்த கற்றல் வாய்ப்புகளை வழங்கவும், புதுமை, கண்டுபிடிப்பு மற்றும் எதிா்கால தொழில் முனைவோா் வாய்ப்புகளை நோக்கி மாணவா்களை பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வகத்தின் மூலம் மாணவா்கள் 3 டி பிரிண்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், சென்சாா் தொழில்நுட்பம், ரோபட்கள் உருவாக்குதல் தொழில்நுட்பம் குறித்து கற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வகத்தின் மூலம் மாணவா்கள் 3 டி பிரிண்டிங், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், சென்சாா் தொழில்நுட்பம், ரோபட்கள் உருவாக்குதல் தொழில்நுட்பம் குறித்து கற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com