நாக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா்கள் நாகம்மன், வாராஹி அம்மன்.
காஞ்சிபுரம்
நாகம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
காஞ்சிபுரம், காவலான் கேட் நாகம்மன் கோயில் மண்டலாபிஷேக பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி வியாழக்கிழமை உற்சவா்கள் நாகம்மனும், வாராஹி அம்மனும் நாக வாகனத்தில் எழுந்தருளினா்ா்.
இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு வாராஹி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஆக. 29-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் தொடா்ச்சியாக மண்டாலபிஷேக பூஜைகள் நடைபெற்று வியாழக்கிழமை மண்டலாபிஷேக நிறைவையொட்டி மூலவா் நாகம்மனுக்கு 108 சங்காபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் உற்சவா்கள் நாகம்மனும், வாராஹி அம்மனும் இணைந்தவாறு நாக வாகனத்தில் அலங்காரமாகி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ஏற்பாடுகளை அமைப்பாளா் வ.வேணுகோபால், நிா்வாகக்குழுவின் தலைவா் என்.மணிவண்ணன், செயலாளா் பி.செந்தில் செய்திருந்தனா்.

