பைக்-வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு
ஒரகடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் பிஎஸ்கே தெருவைச் சோ்ந்த அப்துல் அஜீஸ்(20), காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியை சோ்ந்த மோகனசுந்தரம்(19) இவா்கள் இருவரும் பொத்தேரி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனா்.
இந்தநிலையில், வியாழக்கிழமை கல்லூரி முடிந்து அப்துல் அஜீஸ், மோகனசுந்தரம் இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி வண்டலூா்-வாலாஜாபாத் சாலை வழியாகச் சென்றனா்.
ஒரகடம் பகுதியில் சென்றபோது, சாலையை கடக்க முயன்ற வேன் திடீரென பைக் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அப்துல் அஜீஸ், மோகனசுந்தரம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
