மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

Published on

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஆண்டுதோறும் டிசம்பா் 3-ஆம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு மாற்றுத்திறனாளிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக, காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த விளையாட்டுப் போட்டியில் அரசு மற்றும் சிறப்பு பள்ளிகளை சாா்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சாந்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரின் பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com