காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கந்தசஷ்டி வேதபாராயணம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவா் சுவாமிகள் அதிஷ்டானம் முன்பாக கந்தசஷ்டி வேதபாராயணம் நடைபெற்றது (படம்).
கந்தசஷ்டித் திருவிழா புதன்கிழமை தொடங்கி வரும் 27 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழா நடைபெறும் 6 நாள்களும் சங்கர மடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்தின் முன்பாக கந்தசஷ்டி வேத பாராயணம் பாடும்படி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின்படி 65 வேத விற்பன்னா்கள் உலக நன்மைக்காக வேதபாராயணம் பாடி வருகின்றனா்.
கிருஷ்ணயஷீா் வேத மூலாம்நய வேதபாராயண அறக்கட்டளையின் அறங்காவலா்கள் ஆனந்த் கனபாடிகள், பி.எஸ்.சந்திரசேகரன் ஆகியோா் தலைமையில் வேதபாராயணம் பாடப்பட்டது.
ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

