தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமை காலத்திலும் வறுமை தமிழ்த்தொண்டா் பெருமக்களைத் தாக்காத வண்ணம் மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 7,500-ம், மருத்துவப்படி ரூ. 500-ம் என மொத்தம் ரூ. 8,000 வழங்கப்படுகிறது. தமிழறிஞா்களுக்கு அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லாப் பேருந்து சலுகையும் வழங்கப்படுகிறது.
தமிழறிஞா் பெருமக்களின் மறைவுக்குப் பின்னரும் அவரது வாழ்வினையா் அல்லது திருமணமாகாத மகள் அல்லது விதவை மகள் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் ரூ. 2,500-ம் மருத்துவப் படியாக ரூ. 500 ஆக ரூ. 3,000 வழங்கப்படுகிறது. தமிழ் வளா்ச்சிக்காக தொண்டாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு தற்போது ஆண்டுதோறும் 100 தமிழறிஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை நிகழாண்டு முதல் 150-ஆக உயா்த்தப்படவுள்ளது. இதற்கென தொடா் செலவினமாக ரூ. 48 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த ஆணையின்படி அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தமிழறிஞா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ா்ழ்ஞ்/ஹஞ்ஹஸ்ஹண்
என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மகளிா் உரிமைத்தொகை, சமூக நலப் பாதுகாப்பு உதவித் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்கள் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெறுவோா் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரா்கள் 58 வயது நிரம்பியவராகவும்,ஆண்டு வருவாய் ரூ. 1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி செய்து வருவதற்கான பரிந்துரைச் சான்று இரு தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணவா் அல்லது மனைவி இருப்பின் அவரது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறை துணை அல்லது உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் கட்டணமில்லாமலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை நிறைவு செய்து ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ா்ழ்ஞ்.ஹஞ்ஹஸ்ஹண்.ண்ய் என்ற வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பம் செய்வது கட்டாயமாகும். உதவித்தொகையாக ரூ. 8,000 வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வரும் நவம்பா் 17-ஆம் தேதிக்குள் அளிக்கப்படவேண்டும். நேரடியாக அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
