காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்காரம்

காமாட்சி அம்மன் கோயிலில் சகஸ்ர தீப அலங்காரம்
Updated on

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஜப்பசி மாத அஷ்டமி தினத்தையொட்டி புதன்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் சகஸ்ர தீபங்கள் ஏற்றப்பட்டிருந்த வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

மாதந்தோறும் வரும் அஷ்டமி தினத்தையொட்டி காமாட்சி அம்மன் கோயிலில் வசந்த மண்டபத்துக்கு பெண்கள் பலரும் ஆயிரம் அகல்விளக்கு ஏற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைக் காட்சி நடைபெறுகிறது.

ஐப்பசி மாத அஷ்டமி தினத்தையொட்டி லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. காமாட்சி அம்மன் வசந்த மண்டபத்துக்கு வருவதற்கு முன்னதாக பெண்கள் பலரும் அகல்விளக்குகளை ஏற்றினா். சிறப்பு தீபாராதனைகளுக்குப் பிறகு அம்மன் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com