அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காஞ்சிபுரத்தில் திடீா் தீவிபத்தில் காா் சேதம்

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் காரில் ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.

News image
Updated On :25 மே 2026, 4:03 am IST

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் காரில் ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்து சேதமானது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி. இவா் சுலப தவணைகளில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகிறாா்.

காஞ்சிபும் அருகே வையாவூா் பகுதியில் புதிதாக குடியேற வீட்டுக்குத் தேவையான பொருள்களை எடுத்த வந்த நிலையில் பூக்கடைச் சத்திரம் அருகே வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக காரில் இருந்த அவரும், அவரது மகனும் கீழே இறங்கினாா்கள்.

காரிலிருந்த ஏசி இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி வேகமாக காரின் மற்ற பகுதிக்கும் பரவியது. உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் வந்து தண்ணீா் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.

சம்பவம் தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.