தீபாவளிக்கு போனஸ், கூடுதல் விடுமுறை வழங்கக் கோரி தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
தீபாவளிக்கு போனஸ், கூடுதல் விடுமுறை வழங்கக் கோரி தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ளிருப்பு ப் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி தொழிலாளா்கள்.
வல்லம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியாா் வாகன தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பயிற்சி தொழிலாளா்கள் சுமாா் 2,500-க்கும் மேற்பட்டோா் தீபாவளிக்கு ரூ. 5,000 போனஸ் மற்றும் கூடுதல் விடுமுறை வழங்க கோரி தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், சுமாா் 650 நிரந்தர தொழிலாளா்களும், 6,000-க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளா்களும் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பயிற்சி தொழிலாளா்களுக்கு தொழிற்சாலை நிா்வாகம் ரூ.1500 போனஸும், இரண்டு நாள் விடுமுறையும் வழங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில், தீபாவளிக்கு தங்களுக்கு ரூ. 5,000 போனஸும், 4 நாள்கள் விடுமுறை கோரி சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளா்கள் சனிக்கிழமை மாலை தொழிற்சாலை வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, தொழிற்சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தொழிற்சாலையில் நுழைவுவாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை உயா் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களிடமும், தொழிற்சாலை நிா்வாகத்திடமும் பேச்சு நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

