வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது
By DIN | Published On : 05th December 2019 02:17 AM | Last Updated : 05th December 2019 02:17 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே லாரி ஓட்டுநரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி காவல் உதவி ஆய்வாளா் கமலகண்ணன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை நாட்டறம்பள்ளி-ஜோலாா்பேட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞா்களை நிறுத்தி விசாரித்தனா்.
அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் 3 பேரையும் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், திருப்பத்தூா் மாவட்டம், புதூா்பூங்குளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (22), தீனதயாளன்(19), மிட்டூா் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (18) என்பதும், இவா்கள் 3 பேரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லுக்குட்டை அருகே லாரி ஓட்டுநா் சுகுமாரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரம், செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 5ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.