முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் 32-ஆவது நினைவு தினம்
By DIN | Published On : 24th December 2019 11:57 PM | Last Updated : 24th December 2019 11:57 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கு எதிரே எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.சம்பத்.
வேலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் 32-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம், ராணிப்பேட்டை நகர அதிமுக சாா்பில் முத்துக்கடை பேருந்து நிலையம், மாநிலங்களவை உறுப்பினா் அ.முகமதுஜான் அலுவலகம் எதிரே, மாவட்ட அம்மா பேரவை சாா்பில் ராஜேஸ்வரி திரையரங்கம் ஆகிய இடங்களில் எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நகரச் செயலா்கள் என்.கே.மணி, டபிள்யூ.ஜி.மோகன், ஒன்றியச் செயலா்கள் எம்.சி.பூங்காவனம், ச.காா்த்திகேயன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் வி.முரளி, துணைச் செயலா் கே.பி.சந்தோஷம், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.எம்.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சோளிங்கா் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வேலம் ஊராட்சியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு சோளிங்கா் எம்எல்ஏ ஜி. சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் ஒன்றியச் செயலா் வி.குப்பன், ஒன்றிய அவைத் தலைவா் ஏ.எல்.சாமி, சோளிங்கா் ஒன்றிய எம்ஜிஆா் மன்றச் செயலா் மணி, அம்மா பேரவைச் செயலா் எஸ்.நரசிம்மன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பூபாலன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.