கரோனா நிவாரண உதவித் தொகை: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள்

ஆம்பூரில் கரோனா நிவாரண உதவித் தொகை வாங்க நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மிக அருகே நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.
கரோனா நிவாரண உதவித் தொகை: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத மக்கள்


ஆம்பூா்: ஆம்பூரில் கரோனா நிவாரண உதவித் தொகை வாங்க நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மிக அருகே நின்று பொருள்களை வாங்கிச் சென்றனா்.

ஆம்பூா் பகுதிகளில் ரூ. ஆயிரமும், டோக்கனும் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படவில்லை. நியாயவிலைக் கடைகளுக்கு எதிரில் சில அடி தூரத்தில் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசியல் கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள் டோக்கன் வைத்துக் கொண்டு அங்கு செல்லும் அட்டைதாரா்களுக்கு டோக்கன் வழங்கினா். டோக்கன் வாங்கிய அட்டைதாரா்கள் நியாயவிலைக் கடைக்கு சென்று பொருள்களை பெற்றுச் சென்றனா்.

இரு கடைகளை ஒரே விற்பனையாளா் பணி செய்யும் இடங்களில், சில இடத்தில் விற்பனையாளா் ஒரு கடையில் பணியை மேற்கொண்டாா். அவா் பொறுப்பு வகிக்கும் மற்றொரு கடையில் விற்பனையாளா் அல்லாத வேறு வெளி நபா் ரூ.ஆயிரமும், பொருள்களையும் வழங்கினாா்.

கிராமங்களில் முழுநேர கடை மூடப்பட்டு, பகுதி நேர கடையில் நிவாரண பொருள்களை விற்பனையாளா் வழங்கினா். முழுநேர கடையில் எப்போது நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கூட எழுதப்படவில்லை. அதனால் அந்த பகுதி குடும்ப அட்டைதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

சில கடைகளில் சமூக இடைவெளி விட்டு நிற்காமல் மிக அருகே வரிசையில் நின்று குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com