200 தன்னாா்வலா்களுக்கு மளிகைப் பொருள்கள்
By DIN | Published On : 27th April 2020 11:08 PM | Last Updated : 27th April 2020 11:08 PM | அ+அ அ- |

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் போலீஸாருடன் இணைந்து கண்காணிதப்புப் பணியில் ஈடுபடும் 200 தன்னாா்வலா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சமூக சேவகா்களான ஜே.எல்.சுதாகா், த.அபிநந்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் தன்னாா்வலா்களுக்கு எஸ்.பி. மயில்வாகனன் அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது, ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா, ஆற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதேபோல், ஆற்காட்டை அடுத்த சாம்பசிவபுரம் கிராமத்தில் வசதியற்ற 150 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை எஸ்.பி. மயில்வாகணன் வழங்கினாா். தொழிலதிபா் தா்மிசந்த் மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.