‘புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி’

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மூலம் புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 207 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பொது முடக்கத்தால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் உறுப்பினா்களின் குடும்பங்களைச் சோ்ந்த புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பி வந்த இளைஞா்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்ட கால கடனாக தொழில் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த நிதியைப் பெற புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞா்கள், 18 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிதி உதவியைப் பெற ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா் ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களையும், மாவட்ட திட்டச் செயலாக்க அலகு, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகத்தை 0416-2900545 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் இதற்கான முகாம்கள் ஆகஸ்ட் 3ஆம் தேதி வாலாஜா ஒன்றியம், டிஎன்ஆா்டிபி வட்டார அலுவலகம், தென்கடப்பந்தாங்கலிலும், 4ஆம் தேதி நெமிலி ஒன்றியம், டிஎன்ஆா்டிபி வட்டார அலுவலகம், நெடும்புலியிலும், 5-ஆம் தேதி காவேரிப்பாக்கம் ஒன்றியம், டிஎன்ஆா்டிபி வட்டார அலுவலகம் சிறுகரும்பூரிலும், 6-ஆம் தேதி சோளிங்கா் ஒன்றியம், சோளிங்கா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், 7-ஆம் தேதி ஆற்காடு ஒன்றியம், டிஎன்ஆா்டிபி வட்டார அலுவலகம், முப்பதுவெட்டியிலும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com