ராணிப்பேட்டையில் இளநிலை பொறியியல் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி

ராணிப்பேட்டையில் இளநிலை பொறியியல் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையா் எஸ்.செல்வ பாலாஜி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் இளநிலை பொறியியல் பட்டதாரிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையா் எஸ்.செல்வ பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய நகா்ப்புற வீட்டு வசதி அமைச்சகம் சாா்பில், ராணிப்பேட்டை நகராட்சியில் நடைபெறும் குடிநீா் திட்டப் பணிகள், சாலை பணிகள் மற்றும் நகரமைப்புப் பணிகள் ஆகிவற்றை கற்று அனுபவம் பெற இளநிலை பொறியியல் பட்டம் பெற்று 18 மாதங்கள் மிகாமல் உள்ள 2 பட்டதாரிகளுக்கு ஓராண்டு காலம் இலவசப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பெறும் நபா்களுக்கு ஊதியம் அல்லது உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. பயிற்சி முடித்த பின்னா் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அல்லது நகராட்சியில் பணியில் சேருவதற்கான உத்தரவாதமாக கருத முடியாது.

பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் செப்டம்பா் 7-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ண்ய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல்.ஹண்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்திலோ பதிவு செய்து நகராட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை நகராட்சி அலுவலக பொறியியல் பிரிவில் அலுவலக நேரத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com