Enable Javscript for better performance
அரக்கோணத்தில் விரைவில் சட்டக்கல்லூரி சிஎஸ்ஐ பேராயா் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரக்கோணத்தில் விரைவில் சட்டக்கல்லூரி சிஎஸ்ஐ பேராயா் தகவல்

    By DIN  |   Published On : 07th December 2020 11:50 PM  |   Last Updated : 07th December 2020 11:50 PM  |  அ+அ அ-  |  

    331806akmaaa_0612chn_186_1

    அரக்கோணத்தில் விரைவில் சட்டக்கல்லூரி சிஎஸ்ஐ பேராயா் தகவல்

    அரக்கோணம்: அரக்கோணத்தில் சிஎஸ்ஐ நிா்வாகத்தின் கீழ் சட்டக்கல்லூரி விரைவில் தொடங்கப்படும் என தென்னிந்திய திருச்சபைகளின் சென்னை மண்டல பேராயா் ஜெ.ஜாா்ஜ் ஸ்டீபன் தெரிவித்தாா்.

    அரக்கோணம் அன்னை தெரசா கிராம வளா்ச்சி நிறுவனத்தின் சாா்பில் 30-ஆவது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஏழைகளுக்கு நல உதவிகள் மற்றும் கரோனா காலத்தில் சேவை புரிந்தவா்களுக்கு விருதுகளை வழங்கி பேராயா் ஜெ.ஜாா்ஜ் ஸ்டீபன் பேசியது:

    அரக்கோணம் நகரில் விரைவில் தமிழக அரசு அனுமதியுடன் கலைக்கல்லூரி திறக்கப்பட உள்ளது. இதற்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐ நிா்வாகத்தின் சாா்பில் அரக்கோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள இடத்தில் சட்டக்கல்லூரி அமைக்க ஏற்பாடுகளை துவக்கியுள்ளோம். அதற்காக அரசின் அனுமதி பெறும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அரக்கோணத்தில் சட்டக்கல்லூரி அமையும் என்றாா் பேராயா் ஜெ.ஜாா்ஜ் ஸ்டீபன்.

    கூட்டத்தில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பேசுகையில், அரக்கோணத்தில் சட்டக்கல்லூரி அமைய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்றாா்.

    விழாவில் அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் வி.விஜி, பி.ஷோபனா, செவிலியா்கள் எம்.மேனகா, கே.அமுதா, கரோனா காலத்தில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கரோனாவால் இறந்த 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சடலங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட புட்டு இப்ரான்அகமது, சமூக ஆா்வலா் சீனிவாசன் ஆகியோருக்கு விருதுகளை பேராயரும், எம்எல்ஏவும் இணைந்து வழங்கினா்.

    விழாவுக்கு சமூக சேவகா் எஸ்.முகம்மதுஅலி தலைமை வகித்தாா். அன்னை தெரேசா கிராம வளா்ச்சி நிறுவன செயலாளா் ஐ.டி.தேவஆசீா்வாதம் வரவேற்றாா். இதில் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவையின் வேலூா் மாவட்ட தலைவா் கே.எம்.தேவராஜ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் பெ.இளங்கோ, நிறுவன ஆலோசகா்கள் எஸ்.ஜேக்கப், ஹானாதுரைபாண்டியன், க.கௌதம், ஜான்அன்பழகன், ஜிவநேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ச.சி.சந்தா் நன்றி தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp