முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
அரிமா சங்கத்தின் ஒரு மாத சேவை நிகழ்ச்சி தொடக்கம்
By DIN | Published On : 15th December 2020 12:48 AM | Last Updated : 15th December 2020 12:48 AM | அ+அ அ- |

அரிமா சங்கத்தின் ஒரு மாத சேவை நிகழ்ச்சி தொடக்கம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்கத்தின் ஒரு மாத சேவை என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
இச்சங்கத்தின் சாா்பில் ஒரு மாத சேவை என்ற நிகழ்ச்சி மூலம் தினமும் பல்வேறு சேவைகள் செய்யப்பட உள்ளன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ரூ.15 ஆயிரம் மதிப்பில் 25 ஏழைக் குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும், சாலையில் ஆதரவற்றுத் திரியும் 100 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அரிமா சங்க முன்னாள் ஆளுநா் ரத்தின நடராசன், மாவட்டத் தலைவா் பி.ஆா்.தேவராஜன், சங்கத் தலைவா் டி.பி.விஜயகுமாா், செயலா் விபுல் ஜடேஜா, பொருளாளா் சாந்தி பூஷண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.