திருப்பத்தூா் மாவட்டத்தில் 295 மனுக்கள்
By DIN | Published On : 15th December 2020 12:40 AM | Last Updated : 15th December 2020 12:40 AM | அ+அ அ- |

பெண்ணிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்ட திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 151 மனுக்கள், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் 24, வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் 40, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 63, ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 17 என மொத்தம் 295 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணி, துணை ஆட்சியா்கள் அப்துல் முனீா், பூங்கொடி, லட்சுமி, அதியமான்கவியரசு, வட்டாட்சியா்கள் சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.