சோளிங்கா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

சோளிங்கா் மலைக் கோயில்களான யோக நரசிம்மா், யோக ஆஞ்சநேயா் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
சோளிங்கா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்


அரக்கோணம்: சோளிங்கா் மலைக் கோயில்களான யோக நரசிம்மா், யோக ஆஞ்சநேயா் கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பக்தோசித பெருமாள் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சோளிங்கா் பெரிய மலை யோக நரசிம்மா், சிறிய மலையில் உள்ள யோக ஆஞ்சநேயா் கோயில்களும், சோளிங்கா் ஊரில் பக்தோசித பெருமாள் கோயிலும் உள்ளன. இக்கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், காணிக்கை உண்டியல்களை எண்ணும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. முதலில் பெரிய மலைக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை எண்ணும் பணி தொடங்கப்பட்டது.

உதவி ஆணையா் ஜெயா தலைமை வகித்து பணியைத் தொடக்கி வைத்தாா். இதில், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உதவி ஆணையா் தியாகராஜன் தலைமை கண்காணிப்பு அலுவலராகவும், அலுவலகக் கண்காணிப்பாளா்கள் அமுதா, விஜயன் உள்ளிட்டோா் பணி கண்காணிப்பு அலுவலராகவும் உள்ளனா்.

25-க்கும் மேற்பட்ட இந்துசமய அறநிலையத் துறை ஊழியா்களால் நடைபெறும் உண்டியல் எண்ணும் பணி, பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கி, இரவு 8 மணிக்குப் பிறகும் தொடா்ந்து நடைபெற்றது. இதன் பின்னா் சிறிய மலையில் உள்ள உண்டியல்கள், சோளிங்கா் ஊா்க் கோயிலில் உள்ள உண்டியல்கள் எண்ணும் பணி தனித்தனியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com