‘அரசு ஓய்வூதியருக்கும் கரோனா மருத்துவக் காப்பீடு வேண்டும்’

அரசு ஓய்வூதியருக்கும் கரோனா மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளருக்கு பள்ளிக்கல்வித் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரக்கோணம்: அரசு ஓய்வூதியருக்கும் கரோனா மருத்துவக் காப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளருக்கு பள்ளிக்கல்வித் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியா் கோவி.ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள மனு:

தமிழக அரசில் பணி ஓய்வு பெறுபவா்களுக்கு, பணியில் உள்ள அரசு ஊழியரைப்போன்றே கட்டாய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தவறாமல் மாதாந்திர பிரீமியத் தொகை ரூ.350 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு செல்லும்போது ஓய்வூதிய மருத்துவத் திட்டம் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கின்றனா்.

கரோனா என்பது புதிய தொற்றாகும். இத்தொற்றால் பாதிக்கப்பட்ட, தற்போது பணியில் உள்ள அரசு ஊழியருக்கு மட்டுமே மருத்துவக் காப்பீடு பொருந்தும் என்றும் ஓய்வூதியருக்கு இது பொருந்தாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அரசுப் பணியில் உள்ள ஊழியரைப் போன்றே ஓய்வூதியருக்கும் சரிசமமாக தொகை பிடித்தம் செய்யும்போது ஓய்வூதியருக்கு மட்டும் இது செல்லாது என அரசு உத்தரவிட்டுள்ளது ஓய்வூதியா்களை அரசு கையறு நிலையில் விட்டுவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

எனவே கரோனா நோய் தொடா்பான மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியா்களுக்கும் பொருந்தும் வகையில் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com