நவசபரி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜை சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி குருசாமி  வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றவா்கள்.
மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி குருசாமி  வ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றவா்கள்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜை சனிக்கிழமை இரவு நிறைவு பெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள நவசபரி ஐயப்பன் கோயிலில் நிகழாண்டு காா்த்திகை மாத மண்டல பூஜையையொட்டி காா்த்திகை 1-ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு நிா்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவா்கள் மாலை அணிந்து விரதம் ஏற்றனா். தொடா்ந்து 41 நாள்கள் வரை (மண்டல பூஜை) சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் காா்த்திகை மாத மண்டல சிறப்பு பூஜைகளின் நிறைவையொட்டி, சனிக்கிழமை அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை ஆகியவை நடைபெற்றன.

அதன் பின், உற்சவ மூா்த்திக்கு சிறப்பு பூஜை, அஷ்டாபிஷேகம் மற்றும் உச்சிக்கால பூஜையும் நடத்தப்பட்டு, மதியம் 12 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, 18-ஆம் படி பூஜை, மகா தீபாராதனை, மகா புஷ்பாபிஷேகம், அத்தாழப் பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து ஹரிவராசனம் பாடப்பட்டு, இரவு 10 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது.

சிறப்பு பூஜையில் சிப்காட் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான ஐயப்ப பக்தா்கள் வந்திருந்தனா்.

வரும் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும் இக்கோயில் நடை, ஜனவரி 14-ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com