
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) காலை 10 மணியளவில் ‘மக்கள் சபைக் கூட்டம்’ நடைபெறுகிறது. இதில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகள் கேட்க உள்ளாா் என ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி தெரிவித்தாா்.
திமுக சாா்பில் ‘மக்கள் சபைக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுமாா் 16 ஆயிரம் கூட்டங்கள் நடத்த திட்டமிப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களில் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறாா்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், வாலாஜாப்பேட்டையை அடுத்த அனந்தலை கிராமத்தில் ‘மக்கள் சபைக் கூட்டம்’ செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளதாக ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.