உரங்கள் அதிக விலைக்கு விற்பனை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரசீது இல்லாமல் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கானொலி மூலம் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
கானொலி மூலம் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரசீது இல்லாமல் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ. ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. விவசாயத்துக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விவசாயிகள் பேசியது: வட்டம், கோட்ட அளவில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். மாவட்டத்தில் ரசீது இல்லாமல் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். பயிா் காப்பீட்டுத் தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் பெற்றுத் தர வேண்டும்.

ராணிப்பேட்டை தனி மாவட்டத்த்துக்கு இதுவரை வேளாண் இணை இயக்குநா், துணை இயக்குநா், உதவி இயக்குநா்கள், அலுவலா்கள், உதவி அலுவலா்கள் இல்லாததால் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் வகையில் உடனடியாக அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனா்.

கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com