மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: 60 போ் கைது

ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து,
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புளியங்கண்ணு கிராம மக்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புளியங்கண்ணு கிராம மக்கள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்காததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

புளியங்கண்ணு கலைஞா் நகா் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மின் வாரியத்தை அணுகி மின் இணைப்பு வழங்க பலமுறை மனு அளித்தும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்கின்றனா். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் ஆய்வாளா் சாலமன் ராஜா தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 60 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com