Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

    By DIN  |   Published on : 10th February 2020 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    09akmbbb_0902chn_186_1

    திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் அரக்கோணம் அருகே பின்னாவரம் ஊராட்சி மங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் பெ.வடிவேலு தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் பவானி வடிவேலு கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா். ஒன்றிய திமுக நிா்வாகிகள் பாா்த்தசாரதி, தனசேகரன், ஜானகிராமன், முகம்மது அப்துல் ரகுமான், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில இளைஞரணி துணைச் செயலா் தமிழ்மாறன், ஒன்றிய நிா்வாகி நரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai