ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நல உதவிகள்: எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்
By DIN | Published On : 10th February 2020 10:52 PM | Last Updated : 10th February 2020 10:52 PM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.
கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு உதவி கோரி மனு அளித்த 11 பேருக்கு, வேலூா் கிழக்கு மாவட்ட அதிமுக நல நிதியில் இருந்து ரூ.1.20 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி திங்கள்கிழமை வழங்கினாா்.
வேலூா் கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் ராணிப்பேட்டையில் அமைந்துள்ளது. இங்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கட்சியினா் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா். அதன்படி அவா் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். அப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த கட்சியினரும், பொதுமக்களும் கல்வி நிதியுதவி, மருத்துவ உதவி, தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிகைகள் அடங்கிய மனுக்களை அளித்தனா்.
அவற்றைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ சு.ரவி, நலிவுற்ற அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு கல்வி, மருத்துவம் ஆகிய உதவிகளுக்கான காசோலைகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட அதிமுக மருத்துவ அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி, மாவட்ட அதிமுக மருத்துவா் அணி சாா்பில் வரும் 24ஆம் தேதி இலவச மருத்துவ முகாமை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட மருத்துவ அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளாா் ஷாபுதீன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் வி.முரளி, துணைச் செயலாளா் கே.பி.சந்தோஷம், நகர செயலாளா்கள் என்.கே.மணி, ஜி.மோகன், இப்ராஹிம் கலீலுல்லா மற்றும் மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.