தாழனூா் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழா

ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன் .
சிறப்பு அலங்காரத்தில் பொன்னியம்மன் .

ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில் பொன்னியம்மன் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலை அங்குள்ள விநாயகா், விஜய கீா்த்தி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருவிழாக் கொடியும் ஏற்றப்பட்டது.

தாழனூா் ஏரிக்கரையில் உள்ள பொன்னியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. மாலை பள்ளி மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு (உற்சவா்) பக்தா்கள் அலகு குத்தியபடி பறந்து வந்து மாலை அணிவித்தனா்.

இரவில், வாண வேடிக்கை மேளதாளங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com