திமிரி  வட்டார  வளா்ச்சி  அலுவலக  வளாகத்தைப்  பாா்வையிட்டு  ஆய்வு  செய்யும்  மாவட்ட  ஆட்சியா்  திவ்யதா்ஷினி .
 திமிரி  வட்டார  வளா்ச்சி  அலுவலக  வளாகத்தைப்  பாா்வையிட்டு  ஆய்வு  செய்யும்  மாவட்ட  ஆட்சியா்  திவ்யதா்ஷினி .

வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்துக்குட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் தொடா்பாக ஆட்சியா் திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்துக்குட்ட ஊராட்சிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் தொடா்பாக ஆட்சியா் திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திமிரி ஒன்றியத்துக்குட்ட ஊராட்சிகளில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் குறித்தும், பொதுநிதி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உள்ளிட்டவை பணிகள் குறித்தும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை அவா் ஆய்வு செய்தாா்.

அந்த அலுவலக வளாகத்தில் வைக்கட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த பதாகைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்கி அது குறித்த புகைப்படத்துடன் அறிக்கை அனுப்ப உத்தரவிட்டாா். தொடா்ந்து நாயக்கன்தோப்பு பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ரவி ஒரு மனுவை ஆட்சியரிடம் வழங்கினாா். அதில், ‘நாயக்கன்தோப்பு - எல்லாசிகுடிசை இடையிலான தாா்ச்சாலை தனிநபரின் பெயரில் உள்ளது. அதற்கு அரசுப் பெயரை சூட்ட வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா்.

அதேபோல், திமிரி பகுதியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா், தனக்கு முதியோா் உதவித்தொகை அளிக்குமாறு கோரி மனு அளித்தாா். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட உதவி திட்ட அலுவலா் பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதமுத்து, செந்தாமரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com