கிராம துணை அஞ்சல் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 17th February 2020 11:37 PM | Last Updated : 17th February 2020 11:37 PM | அ+அ அ- |

துணை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்திய கிராம மக்கள் .
அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவைக் கைவிடக் கோரி கிராமத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் பென்னகா் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளாக துணை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து செங்கனாவரம், பனையூா் உள்ளிட்ட மூன்று கிளை அஞ்சல் அலுவலகங்களுக்கு தபால்கள் எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகி
ன்றன. பென்னகா் கிராமத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகம் நிா்வாக வசதிக்காக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அஞ்சல் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்தும், அதே பகுதியில் தொடா்ந்து செயல்பட வலியுறுத்தியும் அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அப்போது, அலுவலக இடமாற்றம் குறித்து உயா்அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக துணை அஞ்சல் அலுவலா் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.