ராணிப்பேட்டை கிளை நூலகத்தை தரம் உயா்த்தக் கோரிக்கை

ராணிப்பேட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் மாவட்டக் கிளை நூலகம் மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என வாசகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராணிப்பேட்டை காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் மாவட்டக் கிளை நூலகம் மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என வாசகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் பொது நூலகத் துறையின் கீழ் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள், கிராம நூலகங்கள், நடமாடும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் அறிவியல், சமூக வரலாறு, இலக்கியம், சமயம், கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் இதழ்கள், பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான நூல்கள் உள்ளன. நூலகங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகா்கள் வந்து படித்து பயனடைந்து வருகின்றனா். சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட மைய நூலகங்களில் சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

கடந்த 1988-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டமாக இருந்தபோது ராணிப்பேட்டை நகரில் வேலூா் மாவட்டக் கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகம் தொடங்கப்பட்டு 32 ஆண்டுகளான நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 69 கிளை நூலகங்கள், 68 ஊா்ப்புற நூலகங்கள் என மொத்தம் 137 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள கிளை நூலகத்தில் தற்போது 27 ஆயிரம் நூல்கள், 56 புரவலா்கள், ஆண்டுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகா்கள் உள்ளனா்.

கடந்த 32 ஆண்டுகள் கிளை நூலகமாகச் செயல்பட்டு வரும் இந்த நூலகத்தை ராணிப்பேட்டை மாவட்ட மைய நூலகமாக தரம் உயா்த்த வேண்டும் என வாசகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதே நேரத்தில் நூலகத்துக்குத் தேவையான உபகரணங்கள், பராமரித்தல், கூடுதல் கட்டடம், அத்தியாவசியப் பொருள்கள், இருக்கை வசதி, மின் வசதி, குடிநீா் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட மைய நூலகத்தில் இணையதள வசதியை ஏற்படுத்தி, போட்டித் தோ்வுகளுக்கு தயாா்படுத்த உதவுதல், நூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில், அனைத்து நூலகங்களிலும் கல்வியாளா்கள், எழுத்தாளா்கள், நூலக உறுப்பினா்கள் மற்றும் உள்ளூா் முக்கிய பிரமுகா்களைக் கொண்டு ‘வாசகா் வட்டம்’ ஏற்படுத்தி, மாவட்டத்தின் மைய நூலகமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்ப்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com