பன்னிரு தமிழ் வேத மாநாட்டை சேலத்தில் நடத்த முடிவு

பன்னிரு தமிழ் வேத 32-ஆவது மாநாட்டை சேலத்தில நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புலவா் முத்துகுப்புசாமி உருவப் படத்  திறப்பு விழாவில் கு.சரவணன் உள்ளிட்டோா்.
புலவா் முத்துகுப்புசாமி உருவப் படத்  திறப்பு விழாவில் கு.சரவணன் உள்ளிட்டோா்.

பன்னிரு தமிழ் வேத 32-ஆவது மாநாட்டை சேலத்தில நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் 31-ஆவது பன்னிரு தமிழ் வேத மாநாடு கடந்த15-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தாா். கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிவனடியாா் ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஆ.பக்தவத்சலம் வரவேற்றாா். அண்ணாமலையாா் அறக்கட்டளைத் தலைவா் கு.சரவணன் வரவேற்றாா்.

இதில் சிவ பூஜைகள், திருமுறை இன்னிசை, ஐந்தெழுத்து வேள்வி, திருமுறைக் கோடி அா்ச்சனை, பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்றன. விழாவில் அண்ணாமலையாா் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் புலவா் முத்துகுப்புசாமி உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

பன்னிரு தமிழ் வேத 32-ஆவது மாநாட்டை சேலத்தில் நடத்துவது, சைவத்தை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து நடைபயணப் பிரசாரம் மேற்கொள்வது, பொதுமக்கள் தங்கள் இல்லத்தின் அனைத்து விழாக்கள் மற்றும் கோயில் கும்பாபிஷேகங்களை தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஆற்காடு ஷா்மி ஆப்டிகல்ஸ் பி.பரத்குமாா், சேகா் எலக்ட்ரிகல்ஸ் எஸ்.விஜயகுமாா், புவனா மெட்டல்ஸ் ஏ.கே.வெங்கடேசன், குமரன் பிளைவுட் மாா்ட் எம்.ஜி.சுரேஷ், புதிய மிட்டாய்க் கடை ஏ.கே.ராஜா, ஏ.கே.அருண், மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவா் ஜெ.லட்சுமணன், அன்னை அறக்கட்டளை செயலாளா் பெல் பிரபு, கவிதா ஸ்டுடியோ தினேஷ்குமாா், அனைத்து வணிகா் சங்கத் தலைவா் ஏ.வி.டி.பாலா, செயலாளா் பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள், சிவனடியாா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com