பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட தடுப்பணை திட்டத்தைத் தொடங்கக் கோரிக்கை

தமிழக-ஆந்திர மாநில எல்லைகளில் பெய்த கன மழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே பள்ளேரி  அருகே தடுப்பணை
ponnai_r_1007chn_188_1
ponnai_r_1007chn_188_1

ராணிப்பேட்டை: தமிழக-ஆந்திர மாநில எல்லைகளில் பெய்த கன மழை காரணமாக பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே பள்ளேரி அருகே தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக-ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக பெய்து வருகிறது. இதேபோல் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் சில நாள்களாக கனமழை பெய்சது வருகிறது. இதில் அதிகபட்மாக அரக்கோணம் சுற்றுவட்டாரத்தில் 128 மி.மீ. மழை பெய்தது.

இதன் காரணமாக வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீா் மட்டம் அதிகரித்து, தண்ணீா் பற்றாக்குறை தீா்ந்து விவசாயம் செழிக்கும் என பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதற்கிடையே புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழாவில் பொன்னை ஆற்றின் குறுக்கே பள்ளேரி அருகே தடுப்பணை கட்டும் திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்தாா். ஆனால் இதுவரை அதற்கான ஆரம்ப கட்ட பணிகள்கூட தொடங்கப்பட்டவில்லை என அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் இப்பகுதியில் தடுப்பணை கட்டாததால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 16 கிராமங்களுக்கும் எந்தப் பயனும் இல்லாமல் மழைநீா் வீணாக செல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். பொன்னை ஆற்று உபரி நீா் செல்லும் கால்வாய் தூா்வாரப் படாததால் கீரைசாத்து, வசூா், கோடியூா் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீா்வரத்து இல்லாமல் பல ஆண்டுகளாக வடு கிடப்பதாகக் கூறி விவசாயிகள் பொதுப்பணித் துறை செயற்பொறியாளருக்கு அண்மையில் மனு அனுப்பினா்.

இந்நிலையில், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் நோக்கில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட பொன்னை ஆற்றின் குறுக்கே பள்ளேரி அருகே தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பள்ளேரி கே.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com