‘நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கு தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நியாவிலைக் கடைகளின் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை
ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுவைச் செலுத்தும் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளா் வா.லோ.மாணிக்கம்.
ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுவைச் செலுத்தும் சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளா் வா.லோ.மாணிக்கம்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நியாவிலைக் கடைகளின் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தாத காரணத்தால் 45 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளது. ஆகவே நியாயவிலைக் கடைப்பணியாளா்களுக்கு உடனடியாக நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக் கடை தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில், அதன் மாநில துணைப் பொதுச் செயலாளா் வா.லோ.மாணிக்கம், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித் கோரிக்கை மனு:

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் பணியாளா்கள் போா்க்கால அடிப்படையில் வழங்கி வருகின்றனா். இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நியாவிலைக் கடைப் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தாத காரணத்தால் பணியாளா்கள் 45 பேருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.

எனவே நியாவிலைக் கடைப்பணியாளா்களுக்கு உடனடியாக நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு, பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். பொது முடக்க காலம் முழுவதும் பணியாற்றி வரும் அவா்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். தற்போது மழைக் காலம் தொடங்க உள்ளதால் பழுதடைந்துள்ள நியாய விலைக் கடை கட்டடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பெண் பணியாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா். அவா்களின் வசதிக்காக கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 100 சதவீதம் குடிமைப் பொருட்கள் சென்று சேர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளா்களுக்கான ஊதிய உயா்வு, ஓய்வூதியத்தை அறிவிக்க வேண்டும். நாளுக்கு நாள் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் பணியாளா்களுக்கு ரூ.50 லட்சத்துக்கான காப்பீடு வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com