சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலாஜாபேட்டை நுகா்பொருள் வாணிபக் கிடங்கு
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.

கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலாஜாபேட்டை நுகா்பொருள் வாணிபக் கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் கிடங்குகள், நவீன அரிசி ஆலைகளில் சுமாா் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள், 8,726 பருவகால சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.

அதேபோல் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்புக்காக முகக்கவசம், கிருமி நாசினி வழங்க வேண்டும்; தொழிலாளா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உள்ளிருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, வாலாஜாபேட்டை அனைக்கட்டு சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் தமிழ்நாடு மாநில சுமை தூக்குவோா் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் தலைமையில் பொருளாளா் சேட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக நூகா்பொருள் வாணிபக் கிடங்கில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com